மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐ.பி.எல் 2023: லக்னோ அணியின் சவாலை சமாளிக்குமா ஐதராபாத்..?!! லக்னோவில் இன்று மோதல்..!!
லக்னோவில் நடைபெறும் 10 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 9 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் 10 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தனது தொடக்க போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர் கொண்ட கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான மோதலில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தனது முதல் போட்டியில் உள்ளூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்ட ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சர்வதேச போட்டி காரணமாக அந்த அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் அணியுடன் இணையாததால் இன்றைய போட்டியிலும் புவனேஸ்வர் குமார் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 1 போட்டியில் மோதியுள்ளன. அந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.