தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அவருக்குப்பின் யாராலும் செய்ய முடியாத புதிய சாதனையை படைக்க காத்திருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 30-ந்தேதி தொடங்கும் (வியாழக்கிழமை) சவுத்தாம்ப்டன் டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்ற நினைக்கும். அதேவேளையில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய விரும்பும்.
நான்காவது டெஸ்டில் இந்தியா பசித்த புலியை போன்று விளையாடும் என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதை வைத்து பார்க்கும்போது 4-வது டெஸ்டில் இந்தியா நான்காவது நாள் ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அவர்கள் வெற்றி உத்வேகத்தில் உள்ளனர். ஆனால், இங்கிலாந்து அணியும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். ஆனால், இந்தியா பசித்த புலிகள் மாதிரி. அவர்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவார்கள்.
தற்போதுள்ள வேகப்பந்து யுனிட் மிகவும் சிறப்பானது. இதுவரை நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி டெஸ்ட் பிளாட் டிரக். அதில் கூட 20 விக்கெட் வீழ்த்த முடியும்.
ஆஸ்திரேலியா ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சிறந்ததாக இருக்கும். அங்கு 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், வீரர்கள் பெயர்கள் வரலாற்றில் எழுதப்படும். இந்திய பந்து வீச்சாளர்கள் அவர்களது பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் புதிய சாதனையை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிளன் மெக்ராத் ஆவார். இவர் தற்போது 563 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடிக்க இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை படுகிறது இதுகுறித்து மெக்ராத் கூறியதாவது "எனது சாதனையை ஆண்டர்சன் முறியடித்துவிட்டால் அதன் பின்னர் யாராலும் அந்த சாதனையை தொடமுடியாது" என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.