வெஸ்ட் இண்டீஸ் வீரரை தனது பேட்டால் ஓங்கி அடிக்க முயன்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்! ஷாக் வீடியோ.!



pakistan-cricket-player-try-to-beat-west-indies-player

கொரோனா அச்சுறுத்தலால் அணைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல்லும் செப்டம்பர் 19 தான் தொடங்குகிறது. ஆனால் முதலில் ரீஸ்டார்ட் ஆகும் ப்ரீமியர் லீக் என்ற பெருமையை கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) பெற்றுள்ளது.

சிபிஎல் டி20 தொடரில் பங்கேற்கும் 6 அணிகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு நெகட்டிவ் என்று வந்த பிறகே, போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பல சோதனைகள் செய்யப்பட்டு சிபிஎல் டி20 தொடரின் நேற்றையப் போட்டி, ஜமாய்கா டாலவாஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் இடையே நடைபெற்றது. 

அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஜமாய்கா டாலவாஸ் அணிக்காகவும், கீமோ பால் பார்படோஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். அப்போது கீமோ பால் பவுலிங்கில் ஆசிப் அலி சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் அது கேட்ச் ஆகி அவுட்டானார். இதனை கீமோ பால் கொண்டாடினார். இதனால் வெறுப்படைந்த ஆசிப் அலி தன்னுடைய பேட்டால் கீமோ பால் முகத்தில் அடிப்பது போல வீசினார்.  இதனை சற்றும் எதிர்பார்க்காத கீமோ பால் அதிர்ச்சியடைந்தார். ஆசிப் அலியின் இத்தகைய செயல் ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.