நேற்றைய போட்டியில் கபில் தேவ் சாதனையை முறியடித்த பும்ரா.!



pumra beat kabil dev record

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் எடுத்தது.

இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக  368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று துவங்கியது. 

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியில் பும்ரா, கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். 

kabil dev

நேற்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும். 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்னதாக இர்பான் பதான் 28 போட்டிகளிலும், முகமது ஷமி 29 போட்டிகளிலும், ஜவகல் ஸ்ரீநாத் 30 போட்டிகளிலும், இஷாந்த் ஷர்மா 33 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். நேற்றைய போட்டி மூலம் கபில்தேவ் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இதற்கு முன் 25 டெஸ்டுகளில் விளையாடி இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், பும்ரா 24 டெஸ்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.