வரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து! இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்!



pv sindhu won gold


உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் தரநிலையில் 5-வது இடம் வகிக்கும் இந்தியாவின் பி.வி சிந்து 4-வது இடத்தில் இருக்கு சீனாவின் சென் யுபேவுடன் மோதினார்.

அந்த போட்டியில் சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாரவுடன், சிந்து மோதினார். 

இறுதிப்போட்டியின் முதல் செட்டில்  21-7 என்ற கணக்கிலும், 2-வது செட்டில் 21-7 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை நசோமியை தோற்கடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பி.வி சிந்து படைத்தார்.