மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதி.! மேலும் 3 பேர் தனிமை.!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஒவ்வொரு போட்டியின் போதும் அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில் நேற்று மாலை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோரோனோ பரிசோதனை மேற்கொண்டதில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடரில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் ஆகியோரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் 171 ரன்கள் முன்னிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கி உள்ளது. இந்நிலையில் வீரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.