தல தோனியின் ஓய்வு எப்பொழுது? பதிலளித்த தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி!



Ravi sasthiri talk about Dhoni retires

மகேந்திரசிங் தோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்து இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

மகேந்திரசிங் தோனி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்பது குறித்து ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம் எழுந்துவருகிறது. இந்தநிலையில் தல தோனிக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பரை தயார்படுத்தப்பட்டுவருகிறது என கூறப்பட்டுவந்தநிலையில்,  நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், 'தோனி ஐ.பி.எல். போட்டி தொடரில் எப்படி விளையாடுகிறார். மற்ற விக்கெட் கீப்பர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது குறித்து எல்லாம் பார்க்க வேண்டும்.  ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இறுதி செய்யப்படும். 

Msd

இந்தநிலையில், யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறித்து இப்போதே ஒவ்வொருவரும் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும். தோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்து இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தான் இந்திய 20 ஓவர் அணியில் இடம் பெறும் சிறந்த வீரர்கள் யார், யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.