மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சச்சின், கோலியை பெருமைப்படுத்திய ரவி சாஸ்திரி! நோஸ்கட் கொடுத்த யுவராஜ் சிங்! அதற்கு ரவி சாஸ்திரி கொடுத்த பதில்!
2011 உலகக் கோப்பையை இந்தியா வென்று நேற்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி சிக்ஸ் அடித்த வீடியோவைப் பதிவிட்டு, “வாழ்த்துக்கள் வீரர்களே! வாழ்நாள் முழுவதும் நீங்கள் கொண்டாட வேண்டிய தருணம் இது. 1983ம் ஆண்டை நாங்கள் கொண்டாடுவது போலவே,” என்று தலைப்பிட்டார்.
மேலும் இந்தப் பதிவுடன் அவர் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரை மட்டும் அவர் குறிப்பிட்டார். இந்த போஸ்ட்டை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், சாஸ்திரிக்கு பதில் அளித்துள்ளார்.
When it comes to World Cups, you are no Junior. Tussi Legend Ho @YUVSTRONG12 ! 🤗 https://t.co/bnZHTyFd8x
— Ravi Shastri (@RaviShastriOfc) April 3, 2020
யுவராஜ் சிங் வெளியிட்ட பதிவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற தானும், ஃபைனலில் 91 ரன்கள் விளாசிய தோனியும் இருந்தோம் என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து யுவராஜ் வெளியிட்ட பதிலில், “நன்றி சீனியர்! அதில் அங்கமாக இருந்த என்னையும் தோனியும் நீங்கள் டேக் செய்யலாம்” என குறிப்பிட்டிருந்தார்.
யுவராஜ் சிங்கிற்கு பதிலளித்த தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “உலகக் கோப்பை என்று வரும் போது நீங்கள் ஜூனியர் அல்ல. நீங்கள் லெஜண்ட்,” என்று கூறியுள்ளார்.