மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேற்றைய ஆட்டத்தில் சூப்பர் ஓவருக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 51 போட்டிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை, டெல்லி, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. நான்காவது இடத்தை பிடிக்கும் முனைப்பில் கைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றது.
இந்நிலையில் நேற்று மும்பை, கைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன் எடுத்தது. 163 என்ற இலக்குடன் களமிறங்கிய கைதராபாத் அணி 162 ரன் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.
நேற்றைய ஆட்டத்தில் சூப்பர் ஓவருக்கு வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் ஹைதராபாத் அணி வீரர் மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடி ஆட்டத்தை மாற்றினார். அதற்கு வாய்ப்பு கொடுத்தது மும்பை அணி தான். ஹைதராபாத் அணி கடைசி ஓவரின் 5வது பந்தில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலை இருந்தது.
கடைசி ஓவரின் 5வது பந்தில் மனிஷ் பாண்டே 2 ரன்கள் எடுத்து இறுதி ஓவரின் இறுதி பந்தில் 7ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழ்நிலை இருந்தது. ஆனால் இறுதி பந்தினை வீசுவதற்கு மும்பை அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. அதனால் மனிஷ்பாண்டேக்கு அந்த பதட்டம் குறைந்து இறுதி பந்தினை எதிர்த்து ஆடுவதற்கு தயாராக இருந்தார்.
இறுதி பந்திற்கு நீண்ட கால அவகாசம் கிடைத்ததால். மனிஷ் பாண்டேக்கு ஒரு தைரியம் வந்ததது. மும்பை அணி அதிக நேரம் எடுக்காமல் இருந்திருந்தால் பதட்டத்தில் சிக்ஸர் அடிக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும். மும்பை அணி கொடுத்த நீண்ட இடைவெளியே சூப்பர் ஓவருக்கு வாய்ப்பாக அமைந்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.