மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓரங்கட்டப்பட்ட விஜய்சங்கர்; புதிதாக களமிறங்கும் அதிரடி வீரர்! வெற்றி பெறுமா இந்திய அணி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் இந்தியா வென்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விடும். அப்படி இல்லையென்றாலும் மீதமுள்ள போட்டிகளில் ஏதாவது ஒன்றில் வென்றால் அரையிறுதிக்கு சென்று விடும். ஆனால் இங்கிலாந்தை பொருத்தவரை அரைஇறுதிக்குள் நுழைய இன்றைய போட்டியில் நிச்சயம் வென்றே தீரவேண்டும்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கடந்த நான்கு போட்டிகளாக ஓய்வில் இருந்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் இன்றைய போட்டியில் ஆடுகிறார். இந்திய அணியை பொறுத்தவரை ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கருக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேன் ரிசப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆட்டங்களாக அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் சரியாக எதிர்பார்த்த அளவிற்கு ஆடாததால் அவருக்கு பதிலாக இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் ரிசப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு உலக கோப்பையில் இதுதான் முதல் போட்டியாகும்.