மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டான் ரோஹித் தாறுமாறு... வரலாற்று உலக சாதனை படைத்த ரோகித் சர்மா.!
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது. இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு அவர் தலைமையிலான இந்திய அணி ஒரு 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.