மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை அணியை வீழ்த்த ரோஹித் சர்மா புதிய வியூகம்! சமாளிப்பாரா தோனி!
ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தநிலையில் ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு கைதராபாத்தில் இறுதி போட்டியில் மோதுகிறது.
இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இந்த சீசனில் நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் சென்னை அணி ஒரு முறை கூட வெற்றிபெறவில்லை. மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிபெற்றது. இந்நிலையில் நான்காவது முறையாக இந்த இரு அணிகளும் இன்று இறுதி போட்டியில் மோதுகிறது.
இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், தோனியை கட்டுப்படுத்த மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அணியின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் நடுவரிசையில் களமிறங்கும் அணித்தலைவர் தோனி தான். இதுவரை அவர் 11 இன்னிங்ஸில் 414 ஓட்டங்கள் குவித்துள்ளார். எனவே இறுதிப்போட்டியில் தோனியை தடுத்து நிறுத்துவதே மும்பை இந்தியன்ஸின் திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இரண்டு வீரர்களை வைத்தே தோனியை தூக்கலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த ஐ.பி.எல் தொடரில் பும்ராவின் பந்துவீச்சில் தோனி தடுமாறியுள்ளார். அத்துடன் பும்ராவின் பந்துவீச்சில் 3 முறை தோனி அவுட் ஆகியுள்ளார்.
எனவே, தோனியின் பேட்டிங்கின்போது பும்ரா பந்துவீச ரோஹித் ஷர்மா திட்டம் வகுக்க வாய்ப்புள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யாவும் பந்துவீச்சு மூலம் தோனியை திணறடிப்பார் என்பதால் அவரையும் மும்பை அணி பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆனாலும் சென்னை அணியே இறுதி போட்டியை வென்று தொடரை வெல்லும் என சென்னை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.