மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்டுத்தாக்கிய விராட் கோலி..!! மும்பையை பின்னுக்கு தள்ளி 4 ஆம் இடத்தை பிடித்த பெங்களூரு..!!
ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான 65 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது,
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 65 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 65வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
மொத்தம் உள்ள 70 லீக் போட்டிகளில் இன்னும் 5 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் நேரடியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களுக்கான போட்டியில், முறையே சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா-ராகுல் திரிபாதி ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. இந்த ஜோடியில் அபிஷேக் ஷர்மா 11 ரன்களுடனும் ராகுல் திரிபாதி 15 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த ஹென்றி கிளாசன்-மார்க்ரம் ஜோடியினர் அணியை சரிவிலிருந்து மீட்டதுடன், ஹென்றி கிளாசன் அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஒரு முனையில் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹாரி புரூக் கிளாசனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசென் 49 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 187 ரங்கள் இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி-பாப்-டு-பிளிசி ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி, 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசிய டூ-பிளசி 47 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிய 187 ரன்கள் குவித்துடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 4 வது இடத்தைப் பிடித்தது.