மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அவர் இந்தியாவின் எதிர்கால வீரர்” பத்து ஆண்டுகளுக்கு முன்பே சச்சினை கவர்ந்த பிரிதிவ் ஷா
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும், 3வது போட்டி வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் பிரித்வி ஷா மற்றும் ஹமுமா விஹாரி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரராக களம் காணவிருக்கும் பிரித்வி ஷாவின் பேட்டிங் கடந்த IPL தொடரில் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் அவர் சச்சினை போலவே பேட்டிங் ஸ்டைல் செய்வது தான்.
பிரித்வி ஷா-வின் பேட்டிங் திறமை பற்றி ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.
பிரித்வி ஷாவுக்கு 8 வயதாக இருக்கும் போதே, பிர்த்வி ஷா-வின் இயற்கையான உத்தியை எந்த ஒரு பயிற்சியாளரும் மாற்றக்கூடாது என்று தெரிவித்திருப்பது இப்போது சச்சின் டெண்டுல்கர் வாயாலேயே வெளிவந்துள்ளது.
சச்சின் தற்போது கூறியதாவது:
எதிர்காலப் பயிற்சியாளர்கள் மாற்றுமாறு கூறினாலும் சரி, பேட்டை பிடிக்கும் விதம், பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது நிலையெடுக்கும் உத்தி ஆகியவற்றை ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதே என்று நான் ஷாவிடம் ஏற்கெனவே அறிவுரை வழங்கியுள்ளேன்.
அப்படி யாராவது மாற்றுமாறு உன்னிடம் கூறினால் அவர்களை என்னிடம் அனுப்பிப் பேசச்சொல் என்று ஷா-வுக்கு கூறியிருக்கிறேன். பயிற்சியாளர் மூலம் கற்பது நல்லதுதான் ஆனால் அதிகப்படியான கோச்சிங் பயனளிக்காது.
இவரைப் போன்ற ஒரு ஸ்பெஷல் பிளேயரைப் பார்க்கும் போது எதையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது முக்கியம். ஒரு முழுமையான பேக்கேஜ் என்பது கடவுளின் வரப்பிரசாதம்.
10 ஆண்டுகளுக்கு முன்பாக பிரித்வி பேட் செய்வதைப் பார்க்குமாறு நண்பர்கள் வற்புறுத்தினர். அவர் ஆட்டத்தைப் பார்த்து ஆலோசனை வழங்குமாறு கேட்டனர். நான் பிரித்வியிடம் பேசினேன், அவர் ஆட்டத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினேன், என்றார் டெண்டுல்கர்.
பிறகு நண்பர் ஒருவரிடம் சச்சின் கூறியபோது, “ஆடுவதைப் பார்த்தீர்களா? அவர் இந்தியாவின் எதிர்கால வீரர்” என்று கூறியுள்ளார்.