நல்லா விளையாடுறீங்க.. ஆனா ஏன் சார் உங்கள இந்திய அணி டி20ல எடுக்கல..!! தவான் கூறிய உருக்கமான பதில்..



Shikhar Dhawan comes up with a golden answer when asked about being dropped from T20Is

ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய நீங்கள் ஏன் T20 போட்டியில் தேர்வாகவில்லை என கேட்டதற்கு உருக்கமான பதிலை கூறியுள்ளார் தவான்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடரில் இந்திய வீரர் தவான் மிக சிறப்பான ஆட்டை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்திருந்தார் ஷிகர் தவான். மேலும் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து தவான் ஓப்பனிங் செய்வது சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இணையை பார்ப்பதுபோல் உள்ளதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

Shikar Dhavan

ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய தவான் ஏன் T20 போட்டியில் தேர்வாகவில்லை என ஒரு கேள்வி எழுந்தது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்கர், டி 20 போட்டிகளில் நீங்கள் தேர்வாகாதது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த தவான். "தான் எப்போதும் பள்ளத்தில் இருப்பதாக சிரித்துக்கொண்ட கூறிய தவான், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு பயன்படுத்துவதாகவும் கூறினார்".

மேலும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது தனக்கு மிகுந்த பயனளிப்பதாகவும், அதில் கிடைக்கும் அனுபவங்களை வைத்து தன்னை சர்வதேச போட்டிகளுக்காக தயாராக வைத்துக் கொள்வதாகவும் ஷிகர் தவான் குறிப்பிட்டுள்ளார்.