சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
வீடியோ: இந்த தவறு மட்டும் நேற்று நடக்காமல் இருந்திருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும்!! புலம்பும் ரசிகர்கள்..
குஜராத் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் தோல்வியை தழுவியது சென்னை அணி.
ஐபில் 15 வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில், அதிக போட்டிகளில் வெற்றிபெற்று குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று நடந்த சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி கடைசி நிமிடத்தில் தோல்வியை தழுவியது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் அடித்தது. 170 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலையே அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பல மடங்கு அதிகரித்தது.
ஆனால் குஜராத் அணி வீரர் டேவிட் மில்லர் நிலைத்துநின்று ஆடி அணியியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் டேவிட் மில்லர் 40 பந்துகளில் 94 ரன்கள் விளாசி குஜராத் அணியை வெற்றிபெற செய்தார். எளிதாக வெற்றிபெற்றிருக்க வேண்டிய ஆட்டத்தில், சென்னை அணி மோசமான தோல்வியை தழுவியது.
ஒருவேளை அந்த தவறு நடக்காமல் இருந்திருந்தால் சென்னை அணி வெற்றிபெற்றிருக்கலாம் என்கின்றனர் ரசிகர்கள். ஆம், சென்னை அணி வீரர் பிராவோ 17-வது ஓவரை வீசியபோது, அந்த ஓவரின் 3-வது பந்தை மில்லர் சந்தித்தார். பிராவோ வீசிய பந்தை டீப்லெக்கில் மில்லர் தூக்கி அடிக்க அதை கேட்ச் பிடிக்க வேகமாகவந்த ஷிவம் துபே திடீரென நின்று அந்த கேட்சை கோட்டைவிட்டார்.
இதைப் பார்த்த பிராவோவும், ஜடேஜாவும் கடுப்பாகி களத்தில் சத்தமிட்டனர். பிராவோ தலையில் கைவைத்துக்கொண்டே சென்றுவிட்டார். ஒருவேளை ஷிவம் துபே அந்த கேட்சை பிடித்திருந்தால், அப்போதே மில்லர் ஆட்டம் இழந்து வெளியேறியிருப்பார். சென்னை அணியும் வெற்றிபெற்றிருக்க அதிக வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால் ஷிவம் துபே செய்த தவறால் சென்னை அணியின் வெற்றி பறிபோய்விட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
— Addicric (@addicric) April 17, 2022