அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
நியூஸிலாந்து தொடரில் இந்திய அணியின் அதிரடி வீரர் விலகல்! அவருக்காக களமிறங்கும் இளம் வீரர்கள்!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் பிருத்வி ஷா-வும், டி20 தொடரில் சம்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் அவருக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயத்தின் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் பிருத்வி ஷா-வும், டி20 தொடரில் சம்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 தொடருக்கான இந்திய அணி :
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (து.கேப்டன்), சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் டூபே, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தகூர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி :
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (து.கேப்டன்), பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் டூபே, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தகூர், கேதர் ஜாதவ்.