தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.! சின்னப்பம்பட்டி வீரத்தமிழனை பாராட்டிய சிவகார்த்திகேயன்.!



sivakarthikeyan-wishes-to-natarajan

இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இந்திய அணி களமிறங்கி இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தநிலையில் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்தார். 


இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடராஜனை பாராட்டியுள்ளார். அதில், "நல்ல எப்போர்ட் கொடுத்து விளையாடினீர்கள் சகோ. ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் ஆட்டத்தை விளையாடியது அற்புதம். உங்களை இந்தியாவின் நீல நிற ஜெர்சியில் பார்ப்பதில் மகிழ்ச்சி. இது எங்கள் எல்லோருக்கும் பெருமையான தருணம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.