வார்னரின் புதிய சாதனை கனவை சிறப்பான கேட்ச்சால் தவிடுபொடியாக்கிய ஸ்மித்! சோகத்தில் ரசிகர்கள்



smith-stopped-new-record-of-warner

இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 12 ஆவது ஐபிஎல் தொடரின் 45 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்திஜன் அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் வில்லியம்சன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். மேலும் துவக்கத்தில் ராஜஸ்தான் அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் கோபால் வீசிய நான்காவது ஓவரில் வில்லியம்சன் போல்டாகி வெளியேறினார். 

IPL 2019

அவரை தொடர்ந்து வந்த மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மிகவும் பொறுமையாக ஆடிய வார்னர் தாமஸ் வீசிய 13 ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு தூக்கி அடித்தார். பந்து சரியாக படாததால் மிட் விக்கெட் திசையில் பந்து உயரமாக சென்றது. அப்போது மிட் ஆப் சைடில் நின்ற ஸ்மித் பின்னோக்கி ஓடி சென்று பறந்து சிறப்பாக கேட்ச் பிடித்து வார்னரை அவுட் ஆக்கினார்.

IPL 2019

இதற்கு முன்பு தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் அடித்த வார்னர் இந்த போட்டியில் 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இன்று இன்னும் 13 ரன்கள் எடுத்து இருந்தால் வார்னர் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 6 ஆவது அரைசதத்தை அடித்து இருப்பார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 6 ஆட்டங்களில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தது இருப்பார்.

இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடர்களில் 2012 ஆம் ஆண்டு சேவாக் மற்றும் 2018 ஆம் ஆண்டு பட்லர் ஆகியோர் தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்துள்ளனர். இந்த 2019 ஆம் ஆண்டு தொடரில் புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை வார்னர் இந்த ஆட்டத்தில் தவறவிட்டார்.