மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கோலி செய்தது கேலியாக உள்ளது" இங்கிலாந்து முன்னாள் வீரர் சாடல்!
பென் ஸ்டோக்ஸ் உடன் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறுபிள்ளைதனமாக இருந்தது என ஸ்வான் விமர்சித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆட்டத்தின் 14 ஆவது ஓவரில் சிராஜ் பந்து வீசினார். அவரின் பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் ஏதோ தவறுதலாக பேசியுள்ளார் என தெரிந்தது.
எனவே அந்த ஓவர் முடிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டோக்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைசியில் நடுவர் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான், "கோலி செய்தது மிகவும் சிறுபிள்ளைதனமாக உள்ளது. சிராஜ் மற்றும் ஸ்டோக்ஸ் இருவருக்கும் பிரச்சனை என்றால் அவர்களே பேசி சமாளிக்க வேண்டும். தேவையில்லாமல் கோலி உள்ளே நுழைந்தது சரியல்ல" என கூறியுள்ளார்.