மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளைய போட்டியில் விஜய் சங்கர் நிச்சயம் ஆட வேண்டும் - இந்திய அணிக்கு பிரபல வீரர் அட்வைஸ்
நாளை இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் தான் ஆட வேண்டும்; ரிஷப் பண்டிற்கான நேரம் இது அல்ல என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் நீண்ட நாட்களாக விடை கிடைக்காமல் இருந்த ஒரே கேள்வி, நான்காவது இடத்தில் உலகக்கோப்பையில் இறங்கப் போவது யார்? கடைசி நேரத்தில் இதற்கு விடை அளித்தார் கேஎல் ராகுல். ஆனால் துரதிருஷ்டவசமாக துவக்க ஆட்டக்காரர் தவானுக்கு காயம் ஏற்படவே கேஎல் ராகுல் துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படுகிறார். இந்திய அணிக்கு மீண்டும் நான்காவது வீரருக்கான கேள்வி எழத் துவங்கி விட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆட்டங்களாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு அந்த இடத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு விஜய் சங்கர் ஆடாததால் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்தை களமிறக்க வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார். அதில், "இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் தான் சரியான தேர்வு. நாளை இந்திய அணிக்கு அவர்தான் வெற்றியை தேடித் தரப்போகிறார். ரிஷப் பந்தினை பற்றி யோசிக்க வேண்டாம். உலகக்கோப்பை அணியில் இடம்பெற அவருக்கு இன்னும் மூன்று வாரம் தேவைப்படும்" எனக் கூறியுள்ளார்.
Dear Virat & Ravi - please don’t drop Vijay Shankar.
— Kevin Pietersen🦏 (@KP24) June 29, 2019
I think he’s coming into his own and would potentially win you tomorrow’s game.
Don’t think about Pant. He needs another 3 weeks prep before I think he can get into your World Cup side.
Thanks, boys!
அடுத்தடுத்து வரும் ஆட்டங்கள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவை என்பதால் சரியான முடிவினை எடுக்கும் சூழ்நிலையில் இந்திய அணி இருந்து வருகிறது. நாளைய போட்டியில் எடுக்கப்போகும் முடிவு நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என பொருத்திருந்து பார்ப்போம்.