மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ 50து , நான் 50து! டெல்லி அணியை வச்சு செஞ்ச வாட்சன் மற்றும் டுப்ளஸி! கதறிய டெல்லி!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இருந்து கட்டத்தை நெருங்கியுள்ளது. மும்பை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் மும்பை அணியுடன் மோதப்போகும் அணிக்கான போட்டி சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே இன்று நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 147 ரன் மட்டுமே எடுத்தது.
148 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் டுப்ளஸி, வாட்சன் இருவரும் சிறப்பாக விளையாடி சென்னை அணியை வெற்றியின் அருகில் அழைத்து சென்றனர்.
39 பந்துகளில் 50 ரன் என்ற நிலையில் டுப்ளஸியும், 32 பந்துகளில் 50 ரன் என்ற நிலையில் வாட்சனும் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர்கள் இருவரும் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடியது சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் மும்பை அணியுடன் இறுதி போட்டியில் மோதுகிறது சென்னை அணி.