அனைத்து திட்டங்களையும் சரியாகத்தான் செய்தோம்; தோல்வி மன வேதனை அளிக்கிறது-ரோகித் ஷர்மா..!!



We did all the planning right; Defeat is heartbreaking- Rohit Sharma..!!

தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம், ஆனால் சிறப்பாக பேட்டிங் செய்தோம் பவுலிங்கில் சொதப்பினோம்.. ரோகித் சர்மா மனவேதனை.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா போராடியதால் 20 ஓவர்களில் இந்தியா 168 ரன்களை எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் வீரர்களே ஆட்டத்தை முடித்தனர். இந்தியாவின் பவுலிங் மோசமாக இருந்ததால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றனர். இந்நிலையில் இந்திய அணியின் படுதோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், மிகவும் வருத்தமாக உள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். 

ஆரம்பத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம். எனவே தான் ஆரம்பத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன. அதை இங்கிலாந்து ஓப்பனிங் வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். ஸ்கொயர் திசைகளில் தான் ரன் கசியும் என அறிவோம். இருந்தபோதிலும் அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. முதல் ஓவரில் ஸ்விங் ஆகும் என்று நினைத்தேன், ஆனால் நினைத்த பகுதியில் ஸ்விங் ஆகவில்லை. 

வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் தான் ஆடினோம். அந்த போட்டியில் வேறு மாதிரி இருந்தது. 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும். ஆனால் அனைத்து திட்டங்களையும் நாங்கள் சரியாக செய்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அமைந்தது. என்று அவர் கூறினார்.