மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரையிறுதியில் இந்தியா மீண்டும் இங்கிலாந்துடன் மோதலா! அதிர்ச்சியளிக்கும் லேட்டஸ்ட் புள்ளி பட்டியல்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள உலக கோப்பை தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 38 லீக் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி மட்டும் 14 புள்ளிகளுடன் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
அரையிறுதியில் முதலிடத்தை பிடிக்கும் அணியும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணியும் மோதும். அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் மோதும். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தனது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தையே தக்க வைத்துக் கொள்ளும்.
இந்திய அணியை பொருத்தவரை அடுத்த இரண்டு போட்டிகளிலோ அல்லது ஒரு போட்டியிலோ வென்றால் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தை நிச்சயம் பிடித்துவிடும். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் 3 ஆவது இடத்தை பிடித்துவிடும்.
இந்த சூழ்நிலையில் அரைஇறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதற்கே அதிகமான வாய்ப்புகள் உள்ளன. யாரிடமும் தோற்காத இந்திய அணியை இங்கிலாந்து வென்றதால் அரையிறுதியிலும் இதே நிலை நீடித்து விடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்திய அணிக்கு இந்த இக்கட்டான சூழ்நிலை வராமல் இருக்க, ஒன்று ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியுற்று இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் முதல் இடத்தையே பிடித்து விடும். அல்லது இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் தோல்வியுற்று அரையிறுதிக்குள் நுழையாமல் போக வேண்டும்.