மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இங்கிலாந்தை பழிவாங்க அருமையான சந்தர்ப்பம்! சாதிப்பார்களா இந்திய வீரர்கள்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கலந்துகொண்ட 10 அணிகளில் இதுவரை 3 அணிகள் அரையிறுதிக்குள் முன்னேறிவிட்டன. நான்காவது அணி நியூசிலாந்தா, பாக்கிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வரும் சனிக்கிழமை நடைபெறும் கடைசி லீக் போட்டியின் போது தான் எந்த அணி முதலிடத்தை பிடிக்கும் என்பது தெரியவரும். ஒருவேளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று இந்தியா இலங்கையை வென்றால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்.
ஆனால் இவ்வாறு நடக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. மிகவும் பலத்துடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்பது சற்று கடினம் தான். எனவே பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் தான் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் மூன்றாமிடத்தில் இங்கிலாந்துதான் என ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
எனவே முதலிடத்தை பிடிக்கும் ஆஸ்திரேலியா நான்காவது இடத்தை பிடிக்கும் நியூசிலாந்து அல்லது பாகிஸ்தானை அரையிறுதியில் எதிர்கொள்ளும். இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் இந்திய அணி இங்கிலாந்தை அரை இறுதியில் எதிர்கொள்ளும்.
இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை இங்கிலாந்திடம் மட்டுமே தோற்றுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி புதிய உத்வேகத்துடன் காணப்படுகிறது. எனவே இங்கிலாந்தை அரையிறுதியில் வெல்ல வேண்டுமெனில் இந்திய அணி முழு பலத்துடன் நிச்சயம் போராட வேண்டியிருக்கும். ஏற்கனவே பெற்ற தோல்விக்கு பழி வாங்க இந்திய அணிக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்களா இந்திய வீரர்கள்!