மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகக்கோப்பை வரலாற்றில் கில்லி கீப்பர்கள்; தல தோனிக்கு எந்த இடம் தெரியுமா?
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆட்டங்கள் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இந்நிலையில், உலக கோப்பை அரங்கில் சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, இலங்கை அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் இறங்கி கலக்கிய குமார் சங்ககாரா விக்கெட் கீப்பிங்கில் அசத்தியுள்ளார். இவர் உலகக்கோப்பை அரங்கில் 36 இன்னிங்சில் 54 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2003ல் அறிமுகமான சங்ககரா அதே ஆண்டில் 17 விக்கெட்டும், 2007ல் 15 விக்கெட்டும், 2011ல் 14 விக்கெட்டும், 2015ல் 8 விக்கெட்டும் என மொத்தமாக 54 விக்கெட் வீழ்த்தி காரணமாக இருந்துள்ளார்.
அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக பல போட்டிகளில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து பவுலர்களை மிரட்டிய கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பிங்கிலும் மிரட்டியுள்ளார். 2003ல் 21 விக்கெட் கைப்பற்றி அசத்திய அவர் ஒரே இன்னிங்சில் அதிகபட்சமாக 6 கேட்ச் பிடித்து அசத்தினார்.
மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளார். தோனி மூன்று உலகக்கோப்பை தொடரில் (2007, 2011, 2015) என 32 விக்கெட் கைப்பற்றியுள்ளார். தற்போதைய உலகக்கோப்பை தொடரில் 2 என 34 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நான்காவது இடத்தில் முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மெக்கலம் உள்ளார். இவர் நான்கு உலகக்கோப்பை தொடரில் (2003, 2007,2011,2015) என நான்கு உலகக்கோப்பை தொடரில் 32 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஐந்தாவது இடத்தில் முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் மார்க் பவுச்சர் உள்ளார். கடந்த 1999 முதல் 2003 வரை உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ள பவுச்சர், 31 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.