மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேற்றைய ஆட்டத்தில் இறுதி ஓவரில் நடந்த ஒரு சுவாரஷ்யம்! கவனித்தீர்களா அதை?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரின் 25வது லீக் போட்டியில் ராஜஸ்தான், சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ராசஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் மட்டுமே எடுத்தது.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 6 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ராய்டு மற்றும் கேப்டன் தோணி இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
கடைசி ஓவரில் 18 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஜடேஜா. சென்னை அணி நிச்சயம் வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய மூன்றாவது பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார் தல தோணி.
இறுதி ஓவரின் இறுதி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை அணி இருந்தது. இறுதி பந்தினை சாண்ட்னர் சிக்ஸர் அடித்து சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதி ஓவரில் முதல் பந்தை வீசிய ஸ்டோக்ஸ் பந்தை வீசிவிட்டு கீழே விழுந்தார். அந்த பந்தை சிக்சருக்கு அனுப்பிவிட்டு ஜடேஜாவும் கீழே விழுந்தார். அந்த காட்சி இரு அணி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது.