மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது உலக சாதனையை இந்திய அணியில் ஒருவர் தான் முறியடிப்பார்! யுவராஜ் சிங் ஓப்பன் டாக்!
தனது உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யாவால் முறியடிக்க முடியும் என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
இந்திய அணியின் யுவராஜ்சிங், கடந்த 2007ல் இங்கிலாந்துக்கு எதிரான T20உலக கோப்பை லீக் போட்டியில் 12 பந்தில் அரைசதமடித்தார். இதன்மூலம் சர்வதேச T20 அரங்கில் அதிவேக அரைசதமடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இச்சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.
இந்தநிலையில், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த தனது உலக சாதனையை இந்திய அணியின் இளம் வீரரான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவால் முறியடிக்க முடியும். அத்தகைய திறமை அவரிடம் உண்டு என யுவராஜ்சிங் கூறியுள்ளார்.