இந்த கிழமைகளில் பிறந்தால் உங்கள் குணம் எப்படி இருக்கும்?
மனிதரின் வாழ்க்கையுடன் ஆன்மீகமும், அறிவியலும் சேர்ந்து தான் பயணிக்கிறது. இதில் சிலர் ஆன்மீகத்தை நம்புவதில்லை. ஆனால், சிலர் ஆன்மிகத்தை மட்டுமே நம்புகின்றனர்.
எனவே, ஜோதிட ரீதியில் நீங்கள் எந்த கிழமைகளில் பிறந்தால், உங்களுடைய குணாதிசயம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்கும் திறமை படைத்தவர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனம் படைத்தவர்கள். இவர்கள் தலைமை பண்புக்கு தகுதியுடையவராக இருப்பார்கள்.
திங்கள் கிழமை
திங்கள் கிழமையில் பிறந்த நபர்கள் அமைதியான குணம் படைத்தவராக இருப்பார்கள். நேர்மையான வழியில் செல்பவர்கள். இவர்களுக்கு சொந்த தொழில் கைகொடுக்கும்.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு சுய சிந்தனை இருக்காது. மற்றவர்களும் யோசனை கேட்பவராக இருப்பார்கள். ஆனால் பேச்சுத் திறமையில் வல்லவர்களாக திகழ்வார்கள்.
புதன்கிழமை
புதன்கிழமையில் பிறந்தவர்கள் புத்தி கூர்மையுடன் இருப்பார்கள். கல்வியில் ஆர்வத்துடன், மற்றவர்கள் மனதில் உள்ளதை முக்கியமாக அறியக்கூடியவர்கள். உயர்ந்த நிலையில் வாழ கூடியவர்கள்.
வியாழக்கிழமை
வியாழக்கிழமை பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். குறுக்கு வழியில் செல்ல நினைக்க மாட்டார்கள். உறவினர்களை மிகவும் நம்புவார்களாக இருப்பார்கள். ஆனால் எந்த துறையிலும் ஏற்றும் அடைவார்கள் அடையக் கூடியவர்கள்.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்க கூடியவர்கள். தங்களது சிறந்த பேச்சாற்றல் மூலம் வசப்படுத்தி கொள்பவர்கள்.
சனிக்கிழமை
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதாக கையாள்பவர்கள்.