காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களை செய்வது ஆபத்து.! அலட்சியம் வேண்டாம்.!



Dont do This thing at morning

நமது முன்னோர்கள் கூறிய சாஸ்திரத்தின்படி காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களை செய்வது தரித்திரத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். இவற்றை தவிர்க்க காலையில் எழுந்தவுடன் கீழ்காணும் செயலில் ஈடுபடக்கூடாது.

Life style

காலையில் எழுந்தவுடன் பிறரை திட்டுவது, வீட்டில் சண்டை போடுவது, மற்றவர்களுக்கு சாபம் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. 

காலையில் சீக்கிரம் எழுந்து விட வேண்டும். மாறாக நீண்ட நேரம் தூங்குவது வீட்டில் நிதி பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் உடல் நோய்களுக்கு காரணமாக அமையும். இது லட்சுமி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

Life style

காலையில் எழுந்தவுடன் கழுவாத பாத்திரங்கள், கறை படிந்த சமையலறை, சுத்தம் இல்லாத வீடு இவற்றை பார்க்கக் கூடாது. அன்றாடம் இரவில் சமையலறையை சுத்தம் செய்து கழுவாத பாத்திரங்களை அன்றே சுத்தம் செய்து விட வேண்டும். 

காலையில் எழுந்தவுடன் கண்ணாடிக்கு முன்பாக நின்று கொண்டு பார்க்கக் கூடாது. இது மோசமான செயலாகும். அதுபோல வீட்டிற்கு வெளியில் அல்லது மாடியில் நின்று கொண்டு சொந்த நிழலை எக்காரணத்தை கொண்டும் பார்க்க கூடாது.