மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத் தடை நீக்கும் தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?
தமிழ் கடவுளான முருகப்பெருமானை மனமுருகி வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக முருகனுக்கு விரதமிருந்து மனதார வேண்டினால் திருமண தடை நீக்கி, வரங்கள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இதில் முருகனுக்கு முக்கிய பண்டிகையாக இருப்பது தைப்பூசம். இந்த தைப்பூசம் நாட்களில் முருகப்பெருமானின் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த தைப்பூச நாளில் தான் முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டார். எனவே இந்நாளில் திருமணமாகாதவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது நல்ல பலன் கொடுக்கும்.
இந்த ஆண்டு வரும் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. எனவே திருமணமாகாதவர்கள் தினமும் காலையில் முருகப்பெருமானின் படத்திற்கு பூஜை செய்து, விளக்கேற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.