#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேண்டாம்னு சொன்னாலும் நிக்காது.. பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்.! ரிஷப ராசியில் புகுந்த 3 கிரகங்கள்.!
ரிஷப ராசியில் 3 கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அது 12 ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், குறிப்பிட்ட3 ராசிகளுக்கு மட்டும் திடீர் பணவரவையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கப் போகிறது. கடந்த மே 1ம் தேதி ரிஷப ராசிக்கு வியாழன் பெயர்ச்சி அடைந்தார். அடுத்ததாக மே 14ஆம் தேதி சூரியனும் அதே ராசிக்குள் நுழைந்துள்ளார்.
திரிகிரகி யோகம்
அடுத்ததாக வரும் மே 19ஆம் தேதி சுக்கிரன் தன்னுடைய சொந்த ராசியாக உள்ள ரிஷப ராசிக்குள் நுழைய உள்ளார். எனவே, ரிஷப ராசிக்கு திரிகிரகி யோகம் உண்டாகிறது, எனவே, பின்வரும் 3 ராசிகளும் இதனால் அதிர்ஷ்டத்தை பெறும். அந்த ராசிகள் என்னவென்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் கடனாளி ஆகிடுவீர்கள்.! உஷார்.!
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வரும் நாட்களில் செல்வாக்கும், ஆளுமையும் அதிகரிக்க உள்ளது. உங்களுக்கு வீடு தேடி புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். அது மட்டுமல்லாமல் புதிய சலுகைகளும் வியாபாரத்தில் கிடைக்கும். காதல் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையப்போகும் நாட்கள் இனி வரும்.
சிம்ம ராசிக்காரர்கள்
பல வருடங்களாக தேங்கி நின்ற வேலைகள் இப்போது முடிவுக்கு வரும். ஏதாவது, ஒரு விஷயத்தில் முதலீடு செய்தால் அது நல்ல லாபத்தையும் வெற்றியையும் தரும். நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும். குடும்ப வருமானமும் அதிகரிக்கும்.
கடக ராசிக்காரர்கள்
கௌரவமும், செழிப்பும் பெறக்கூடிய நாட்கள் வருகிறது. குடும்பத்துடன் இனி நீண்ட இடைவெளிக்கு பின் சந்தோஷமாக இருக்க முடியும். எதிர்பாராத ஆதாயம் வீடு தேடி வரும். காதல் பிரச்சினையில் இருந்த நபர்களுக்கு வீட்டினர் சம்பந்தத்துடன் திருமணம் நடக்கும். முன்பை விட தொழில் ரீதியாக சிறப்பான லாபத்தை பெற முடியும்.
இதையும் படிங்க: வீட்டில் பண வரவு பெருக, குபேர விளக்கு பூஜையை கண்டிப்பாக செய்து பாருங்கள்.!?