வீட்டில் பண வரவு பெருக, குபேர விளக்கு பூஜையை கண்டிப்பாக செய்து பாருங்கள்.!?



news-about-kubera-vilakku-pooja

குபேர விளக்கு பூஜை

பொதுவாக நமக்கு பலருக்கும் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும். பண வரவு அதிகரிக்க வேண்டும். மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். இதன்படி வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்க நம் வீட்டு பூஜை அறையில் குபேர விளக்கு பூஜை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
குபேர விளக்கு பூஜை செய்ய

astrology

தேவையான பொருட்கள்

1. குபேர விளக்கு,
2. நல்லெண்ணெய் அல்லது நெய்,
3. பச்சைத் திரி,
4. ஐந்து கற்கண்டுகள்,
5. மஞ்சள் மற்றும் குங்குமம்,
6. பச்சரிசி,
7. ஐந்து ரூபாய் நாணயம்,
8. எலுமிச்சை பழம்

இதையும் படிங்க: சாணக்கிய நீதிபடி இந்த குணங்களைக் கொண்ட ஆண்களை தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா.!?

குபேர விளக்கு பூஜை செய்யும் முறை

அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து செம்மண் பட்டையிட்டு அலங்கரிக்க வேண்டும். பின்பு வீட்டு வாசலின் நிலைப்படியில் மஞ்சள், குங்குமம் பூசவும். வாசலில் பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளும், மற்றொரு பாதியில் குங்குமமும் தடவி வீட்டில் நிலை வாசலில் வைத்து விட வேண்டும்.

நிலை வாசலில் மலர்களால் அலங்கரித்து விட்டு குபேர விளக்கு மற்றும் குபேர விளக்கு வைக்கும் தட்டிற்கும் மஞ்சள், குங்குமம் வைத்து போட்டு வைத்துக் கொள்ளவும். தட்டில் பச்சரிசி மற்றும் ஐந்து ரூபாய் நாணயம், சில மலர்கள் வைத்து குபேர விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தினமும் பூஜை அறையில் விளக்கேற்றும் போது குபேர விளக்கு ஏற்றி அலங்காரம் செய்து மனப்பூர்வமாக கடவுளை நினைத்து வேண்டினால் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.

astrology

குபேர விளக்கு பூஜை பலன்கள்

வாரத்திற்கு செவ்வாய், வெள்ளி என இரண்டு நாட்கள் குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்தால் வீட்டில் மகிழ்ச்சி பெருகுவது, பணவரவு அதிகரிக்கும் சண்டை, சச்சரவுகள் குறையும். நாள்பட்ட கடன் தொல்லை குறைந்து நிம்மதி பெருகும். சேமித்து வைத்திருக்கும் செல்வம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: காலில் கருப்பு கயிறு கட்டுபவராக நீங்கள்.? இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க.!?