மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: இரவு 7 மணிவரை இங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகும் மழை - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்.!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றும், நாளையும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இரவு 7 மணிவரையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், சென்னை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்துள்ளது.