மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே... கடந்த ஒரு வருடமாக 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த கராத்தே மாஸ்டர் கைது...
சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 1 ஆம் தேதி 14 வயது சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். பெற்றோருடன் சிறுமியின் கராத்தே மாஸ்டரும் காவல் நிலையம் வந்து சிறுமியை கண்டுபிடிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த சில மணி நேரத்திலேயே சிறுமி வீடு திரும்பியுள்ளார். அதனையடுத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் கோபி என்ற இளைஞருடன் புத்தாண்டை கொண்டாட மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு பின் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கோபியுடன் ஏன் சென்றாய் என்று சிறுமியின் பெற்றோர் கேட்ட போது கராத்தே மாஸ்டர் பற்றிய உண்மைகளை கூறியுள்ளார். அதாவது சிறுமியிடம் கடந்த ஒரு ஆண்டுகளாக கராத்தே மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு பின் சிறுமியிடம் 200 ரூபாய் கொடுத்து இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார் சிறுமி. கராத்தே மாஸ்டரின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவே கோபி என்ற இளைஞரிடம் பழகியதாக தெரிவித்திருக்கிறார்.
அதனையடுத்து போலீசார் கராத்தே மாஸ்டரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சிறுமியை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.