மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! தீவிர கண்காணிப்பில் சென்னை!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,373 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த முறை இருந்ததை விட இந்த ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முழு பொதுமுடக்கத்தை கண்காணிக்க 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தை கண்காணிக்க சென்னை நகருக்குள்ளேயே 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையின்றி சென்றால் வாகன பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் பிற இடங்களுக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் மக்கள், தங்கள் பகுதிகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளுக்கு நடந்து சென்று வாங்கிக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.