தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு! வெறிச்சோடிய சென்னை! முழு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல தளர்வுகளுடன் பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழகத்திலே, குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பரவல் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து சென்னையில் நேற்று முதல் போலீசார் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, சென்னை நகருக்குள் 288 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 112 இடங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
நேற்று சென்னை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசாரும் 100 சதவிகித பணியையும் பொதுமக்களுக்காகவே அர்ப்பணித்து செயல்பட்டனர். பொதுமக்களும் முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதேபோல் வருகிற 30-ந் தேதி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை கடைபிடித்தால் கொரோனா பரவலின் வேகம் விரைவாக குறையும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.