மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சியில் கோவிலுக்கு சென்ற சிறுமி மாயம்... தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
திருச்சியில் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறிய 16 வயது சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி, மதுரை ரோடு கண்ணன் ஸ்டோரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது பதினாறு வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சிறுமியை பல இடங்களிலும் தேடி இருக்கின்றனர். நீண்ட நேரம் தேடியும் சிறுமி கிடைக்காததால் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். 16 வயது சிறுமி திருச்சியில் காணாமல் போயிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமி யாருடனும் சென்று விட்டாரா? இல்லை அவரை கடத்தி விட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.