82 வயது மூதாட்டியின் வாயை பொத்தி 17 வயது சிறுவன் செய்த சம்பவம்.!



17 years old boy raped 82 years old girl

சென்னை எண்ணூர் அருகே 82 வயதான மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை எண்ணூரில் உள்ள அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னி. 82 வயதான இவர் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். என்ன நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி சாலையோரம் மூதாட்டி பொன்னி சடலமாக கிடந்துள்ளார்.

chennai

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான போலீசார் எந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

chennai

அந்த வீடியோவில் மூதாட்டி இறந்த நாளுக்கு முந்தைய நாள் நள்ளிரவில் அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த பொன்னியை தரதரவென சாலையில் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியோடியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்துனர்.

இந்த விசாரணையில் சிறுவன் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் மூதாட்டி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 82 வயது மூதாட்டியை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.