மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேறொருவருக்கு நிச்சியிக்கப்பட்ட பெண்ணை ஒருதலையாக காதலித்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட்.!
தான் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் ஏற்கனவே நிச்சயம் ஆகிவிட்டது என்பது தெரிந்தும் துணிச்சலாக பெண் கேட்க சென்ற காவலர், பெண் தர மறுத்ததால் அவரை கடத்த முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மவ்வட்டத்தில் உள்ள கடையம், கல்யாணிபுரம் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 26). இவர் மணிமுத்தாறில் 9வது பட்டாலியனில் காவலராக பணியாற்றுகிறார்.
மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் 26 வயது பெண்ணை மாரியப்பன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலை பெண்ணிடம் தெரிவித்தும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பெண் செவிலியருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வேறொருவருடன் திருமணம் செய்ய நிச்சயமமும் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில், காவலர் மாரியப்பன் பெண்ணின் வீட்டிற்கே சென்று வரன் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், சம்பவத்தன்று மாரியப்பன் தனது நண்பரான சக காவலர் அருண், அரவிந்த் (வயது 26) ஆகியோருடன் சேர்ந்து, பெண் செவிலியரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து அவரை கடத்தி செல்ல முயற்சித்தனர்.
அவர்களை குடும்பத்தினர் தடுத்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காவலர்களான மாரியப்பன், அருண் ஆகியோருடன் அரவிந்தையும் கைது செய்தனர்.
இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மணிமுத்தாறு காவல் கண்காணிப்பாளர் காவலர்கள் மாரியப்பன், அருண் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.