பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: சென்னை உட்பட 23 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை; அடுத்த 3 மணிநேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.!
திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர் உட்பட 23 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் முழுவதும் வங்கக்கடல் பகுதியில் புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. திருப்பூர், மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களும் தாழ்வான இடங்களில் நீர் தேங்கி வெள்ளத்தில் சிக்கியது.
இதையும் படிங்க: திருப்பூர்: தெருவையே நாசப்படுத்திய அலட்சியம்: டன் கணக்கில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள்.!
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், இன்று முதல் இன்னும் 2 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை தமிழ்நாட்டில் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று வரும் 3 மணிநேரத்திற்கு, இரவு 7 மணிவரை 23 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 மாவட்டங்களில் கனமழை
அதன்படி, கிருஷ்ணகிரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் அக்கா ராக்ஸ்., ரிப்போர்ட்டர் ஷாக்ஸ்.. போறபோக்கில் ஒரு கலாய்.. வைரலாகும் வீடியோ.!