போலீஸ் அக்கா ராக்ஸ்., ரிப்போர்ட்டர் ஷாக்ஸ்.. போறபோக்கில் ஒரு கலாய்.. வைரலாகும் வீடியோ.!



Women Cop Funny Troll to Press Reporter 

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை அதிகாலை ஆந்திர கடலோரப்பகுதி - சென்னை இடையே கரையை கடக்கவுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. 

தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது. அதனை போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி & தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். தொடர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

இலவச உணவு

மேலும், அரசின் சார்பில் இன்றும், நாளையும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் வீடு-வீடாக சென்று உணவு வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் இருப்போருக்கும் உணவு வழங்கப்பட்டது.

மழை-வெள்ளம் காரணமாக வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற தாழ்வான இடங்களில் இருக்கும் மக்கள், தங்களின் கார்கள், இருசக்கர வாகனங்களை பாலத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்த நிகழ்வுகளும் நடந்து இருந்தன.

இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், தனது வாகனம் செயல்படாமல் நின்றதால், புகைபோக்கியில் இருந்த நீரை வெளியேற்ற வாகனத்தை நாட்டுக்குத்தலாக சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். இதனை கண்ட காவல் அதிகாரி ஒருவர், என்ன விஷயம் என விசாரித்தபடி சென்றார்.

அப்போது, தனியார் செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வீடியோ எடுக்க, அவரை கலாய்த்தபடி பெண் காவலர் ஒலிபெருக்கி வாயிலாக பேசி அங்கிருந்து சென்றார். இந்த காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பிளஸ் டூ மாணவி கற்பழிப்பு.!! 3 இளைஞர்கள் போக்சோவில் கைது.!!