மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூகுளால் தற்கொலை.? 30 வயது இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... வெளியான அதிர்ச்சி தகவல்.!
மதுரையைச் சேர்ந்த 30 வயது இளைஞரான விஜயகுமார் என்ற பொறியியல் பட்டதாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆன்லைன் மூலமாக வெளிநாட்டு வகை நாய்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உப்புச்சத்து அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் இது தொடர்பாக தனது பெற்றோர்களிடமும் முறையிட்டுள்ளார் அவரது பெற்றோரும் விஜயகுமாரை சமாதானம் செய்திருக்கின்றனர். இந்நிலையில் அவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் உப்புச்சத்து அதிகமாக இருக்கும் நோய் தொடர்பாக கூகுளில் தகவல்களைத் தேடி இருக்கிறார்.
அப்போது இந்த நோய் இருப்பவர்களுக்கு நிச்சயமாக உயிரிழப்பு ஏற்படும் என கூகுளிலிருந்து அவருக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்கனவே மன உளைச்சலிலிருந்து அவர் காணும் இந்த நோயால் இறந்து விடுவோம் என கருதி கடந்த சனிக்கிழமை இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.