மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில் தகராறு செய்த கணவன்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!
மதுபோதையில் கணவன் தகராறு செய்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மதுரா சீனங்கொட்டாய் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வேடியப்பன் - ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.
இதில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான வேடியப்பன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதன்படி, வழக்கம்போல் நேற்று இரவும் வேடியப்பன் குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதன் பின்னர் வேடியப்பன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை பார்த்த அவரது 3 மகள்களும் மீதி இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.