மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாகனத்தில் சென்றவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி 7 பவுன் தங்க நகை பறிப்பு... தருமபுரி அருகே பரபரப்பு!!
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம்(67). விவசாயியான இவர் நேற்று மாலை அவரது நிலத்தில் வேலை செய்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது சனத்குமார் ஆற்றின் அருகே ராமஜெயம் வந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராமஜெயத்தின் வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
பின்னர் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ராமஜெயத்தின் முகத்தில் மர்ம நபர்கள் தூவியுள்ளனர். அதில் எரிச்சல் தாங்க முடியாமல் ராமஜெயம் கத்தவே அவரது வாயை கட்டி விட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மர்ம நபர்கள் 2 பேரும் மாயமாகி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ராமஜெயம் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவே போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.