மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
9-ம் வகுப்பு மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சி... திடுக்கிடும் தகவல்... தனியார் பள்ளியில் பரபரப்பு .!
கடலூர் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதான இரண்டு சிறுமிகள் வசித்து வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியின் விடுதி ஒன்றில் தங்கி இருந்து ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த மாணவியை தொடர்ந்து அவரது தோழியான இன்னொரு மாணவியும் விஷம் குடித்துள்ளார்.
அந்த மாணவியையும் பள்ளி நிர்வாகத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.