மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மழைக்கு ஒதுங்கியவருக்கு இப்படி ஒரு தண்டனையா?! இளைஞருக்கு நேர்ந்த பரிதாப முடிவு..!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசாந்த் (23). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால், அப்பகுதியில் இருந்த ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றுள்ளார்.
இதற்கிடையே, மழை வலுத்ததுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக திடீரென்று மரத்தின் கிளை ஒன்று முறிந்து கீழே நின்றிருந்த பிரசாந்த் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் கிளைக்கு அடியில் சிக்கிய அவர் பலத்த காயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த டி. கல்லுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.