மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறப்பிலும் பிரியாத தம்பதியினர்.. மனைவியின் இறுதி சடங்கில் கணவர் உயிரிழந்த சோகம்..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியிலுள்ள எடையூர் பெருமாள் கோயில் தெருவில் முருகையன் - இந்திரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். முருகையன் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் இந்திரா கல்லீரல் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் முருகையன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாலியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த இந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்திராவின் மகன் தனது தந்தை முருகையனை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் இறப்பு முருகையனுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து இந்திராவின் சடலத்திற்கு இரு சடங்கு நடந்து கொண்டிருந்தபோது முருகையன் திடீரென மயங்கி கீழே விழுந்து அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கிருந்த அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மனைவியின் இறப்பை ஏற்கமுடியாமல் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.