மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாக்கில் மூட்டை கட்டிய நிலையில் கிணற்றில் வீசப்பட்ட தி.மு.க பிரமுகர்!,. மர்ம முடிச்சை அவிழ்க்க திணறும் போலீசார்..!
மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள எம்.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. தி.மு.க பிரமுகரான இவர், வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதியிலிருந்து பாலாஜி மாயமாகியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, கவட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு முயல் வேட்டைக்குச் சென்ற சிலர் சாமி ராஜ் என்பவரது தோட்டத்து கிணற்றுக்குள் சாக்கில் மூட்டை கட்டிய நிலையில், சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாக்கி மூட்டை கட்டிய நிலையில், கிடந்த ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அடையாளம் தெரியாமல் கிடந்த ஆண் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் உயிரிழந்தவருடைய உடைகளை ஆய்வு செய்தபோது, ஆதார் கார்டு ஒன்று சிக்கியது. அதில் கொலை செய்யப்படு கிடந்தவர் காணாமல் போன வழக்கில் தேடப்பட்டுவரும் தி.மு.க பிரமுகரான பாலாஜி என்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.