மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சோகம்... கொலையில் முடிந்த சந்தேகம்... கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!
திருச்சி மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது திருச்சி மகிலா நீதிமன்றம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்த அய்யாசாமி என்பவரது மகன் பாலச்சந்தர்(43). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் 2019 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்தார். இந்த வழக்கு திருச்சி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பாலச்சந்தருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஒருங்கிணைந்த மகிலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.